கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான
ஆலோசனைக் கூட்டம் கொரோனா தடுப்பு பணி மண்டல சிறப்பு குழு அலுவலர் முனைவர்
இல.சுப்ரமணியன், இஆப., கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.வினித்தேவ் வான்கடே, மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு
தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தலைமையில் நேற்று (20.04.2020)
நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு கொரோனா வைரஸ்
தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்
எடுத்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் விரைந்து
செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது வரை 26 நபர்களுக்கு கொரோனா வைரஸ்
அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இனி வருங்காலங்களில் கொரோனா தொற்று
இல்லை என்ற நிலையை நாம் அடைய வேண்டும். சமூக விலகல் நாம் அனைவரும் கடைபிடிக்க
வேண்டும். பல்வேறு வெளிநாடுகளிலுள்ள நிலைப்பாடுகளை அறிந்து முன்னெச்சரிக்கையாக நம்
நாடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நமது நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும்
ஒழிக்கப்பட வேண்டும். சுனாமி, தானே புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை கடந்த நாம், இந்த
கொரோனா தொற்றினையும் கடந்து செல்ல வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட அளவில் 17 பணிக் குழுக்களும், கள
அளவில் 7 பணிக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள்,
16 பேரூராட்சிகள், 683 கிராம பஞ்சாயத்துகளில் தினந்தோறும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு,
கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், தீயணைப்பு துறையினரின் 19 வாகனங்களும், 102
கைதெளிப்பான் ஆகியவை மூலமும் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மாவட்டத்தில்
2895 தூய்மை காவலர்களும், 822 துப்புரவு பணியாளர்களும், தினந்தோறும் செவ்வனே
துப்புரவு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி
கிடைக்க மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளுடன் இரண்டு முறை கலந்தாலோசனை செய்து
அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் கொரோனா
நோய் தொற்றை தடுப்பதற்காக மக்கள் பொது இடங்களில் கூடுவதை தடுக்கும் பொருட்டு
நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மூன்று நிறங்கள் கொண்ட அடையாள
அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தும் நபர் வாரத்திற்கு இருமுறை மட்டுமே
அத்தியாவசியப்பொருட்கள் வாங்குவதற்கு சந்தைகளுக்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ கட்டுப்பாட்டு அறை 1077 என்ற
எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்கள் தேவைகளை தெரிவிக்கலாம். மாவட்டத்தில்
3,721 நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு காய்கறிகள்
விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராமல்
தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீஅபிநவ், இகாப., மாவட்ட ஊராட்சி
தலைவர் திரு.திருமாறன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியர்
திரு.ராஜகோபால் சுங்கரா, இஆப., கடலூர் ஒன்றியக்குழு தலைவர் திரு.தெய்வ பக்கிரி மற்றும் பலர்
கலந்து கொண்டனர்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image