மேக் இன் இந்தியா தொழில் குழுமத்தின் தலைவரும் மனுநீதி அறக்கட்டளையின் தலைவருமான மரியாதைக்குரிய ஐயா மனுநீதி மாணிக்கம் அவர்களின் உத்தரவின்பேரில் ஏழைகளுக்கு அன்னதானம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்து சேமக்கொட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் மேக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வேளாண்மை பிரிவான மனுநீதி அறக்கட்டளை மூலம் கொரோனா ஊரடங்கு 144 முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேக் இன் இந்தியா தொழில் குழுமத்தின் தலைவரும் மனுநீதி அறக்கட்டளையின் தலைவருமான மரியாதைக்குரிய ஐயா மனுநீதி மாணிக்கம் அவர்களின் உத்தரவின்பேரில்
28/ 3/ 2020 முதல் வேலைக்கு செல்ல முடியாதவர்கள், வயதானவர்கள் உணவுக்கு கஷ்டப்படுபவர்கள் போன்ற வறுமையில் வாழ்ந்தவர்களுக்கு இன்று பதினைந்தாவது நாளாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது நாளொன்றுக்கு 300 நபர்களிடம் மதிய உணவு மனுநீதி அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது இந்த நிகழ்ச்சி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ராயர் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி .எஸ் கே .குணசுந்தரி லட்சுமணன் அவர்கள் முன்னிலையில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியோடு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்விற்கு ராயர் பாளையம் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நன்றி பாராட்டு தெரிவிக்கப்பட்டது