செங்கம் பகுதியில் ஒரு நபர் குடும்ப அட்டைகளை இழந்து வேதனை அடைந்து வந்த ஆதரவற்றவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மளிகை தொகுப்புகள், உணவு அரிசி, பழவகைகளுடன் ரொக்கம் வழங்கினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் ஆதரவற்றவர்களின் நலன் கருதி ஒரு நபர் குடும்ப அட்டைகளை அரசு வழங்கியது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு நபர் குடும்ப அட்டைகளை அரசே நீக்கியது. மேலும் இந்த நிலையில் ஒரு நபர் குடும்ப அட்டைதாரர்கள் மத்திய அரசு வழங்கிய ஆதார் அடையாள அட்டைகளை மட்டுமே வைத்துக்கொண்டு மாதம் தோறும் கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெறமுடியாமலும் மற்றும் தற்பொழுது மத்திய மாநில அரசுகளால் வழங்கிவரும் கொரோனா நிவாரண தொகுப்புகளையும் பெறமுடியாமல் தொடர்ந்து வேதனை அடைந்து வருகிறார்கள்.
மேலும் இந்த நிலையில் ஒரு நபர் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து 25 கிலோ அரிசி, அனைத்து வகையான மளிகைப் பொருட்கள், பழவகைகளுடன் ரொக்கம் வழங்கி வருகிறார்கள். எனவே போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ஒரு நபர் குடும்ப அட்டைகளை இழந்த ஆதரவற்றவர்களை கண்டறிந்து முதியோர் ஓய்வூதிய தொகை வழங்கவும், அரசு கிடைக்கும் சலுகைகளை தொடர்ந்து பெறவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073