திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக்முல்லைமன்னன் தலைமையில் கிருமிநாசினிகளை தூய்மை பணியாளர்களை கொண்டுதெளிக்கப்பட்டது
செங்கம் ஏப் 12 : திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் பேருராட்சி எல்லைக்குட்பட்ட 11.வது வார்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை அவர்களின் ஆலோசனைப்படி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி உத்தரவின் பேரில் நகர செயலாளர் சாதிக்பாஷா முன்னிலையில் வார்டில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக்முல்லைமன்னன் தலைமையில் கிருமிநாசினிகளை தூய்மை பணியாளர்களை கொண்டு இயந்திரம் மூலம் வீடுகள்தோறும் தெளித்து வருகிறார்கள். இதில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரேம்குமார் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073