பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பில்தூய்மைப் பணியாளர்களுக்குஉணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
பண்ணுருட்டி சிறுகிராமம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் நான்கு பேர் மற்றும் ஊ.ஒ.தொ.பள்ளி மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி யில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்கள் இரண்டு பேர் ஆக ஆறு நபர்களுக்கு பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தலைவர் கவிஞர் சுந்தர பழனியப்பன் அவர்கள் சிறுகிராமம் ஊராட்சி மன்ற தலைவர் அன்னலட்சுமி ரமேஷ் அவர்கள் முன்னிலையில் உணவுப் பொருட்களை வழங்கினார்கள் உடன் செந்தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதைகணேசன் மற்றும் நாகராஜ் வினோத்குமார் மற்றும் மு.ஊ.ம.உறுப்பினர் இராமச்சந்திரன் ஊர் பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்