கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆன்லைன் மூலமாக ஓவியம், பேச்சு , கவிதை , நடனம் , போட்டிகள் ஆர்வமாக பங்கேற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்
கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் 6 முதல் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, நடனப்போட்டி, கதை சொல்லுதல் ஆகியவை நடைபெற்றது முன்னதாக இந்த ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பள்ளி சார்பில் தனியாக வாட்ஸ்அப் குரூப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களுடைய திறமைகளை வீடியோவாக பதிவு செய்யலாம் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது இதைத்தொடர்ந்து ஏராளமான பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் தங்களுடைய திறமைகளை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பி வைத்திருந்தனர் இதில் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, நடனப்போட்டி, கதை சொல்லுதல் ஆகியவற்றிலிருந்து சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு வாட்ஸ்அப் மூலம் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது பள்ளி திறந்த பின்பு அவர்களுக்கு பள்ளியின் செயலர் உமையாள் ராமநாதன் மற்றும் தாளாளர் ராமநாத வைரவன் பரிசுகள் வழங்குவார் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது மேலும் பள்ளி முதல்வர் சுமதி கதிரேசன் தெரிவிக்கையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவித்தார்