தேனி மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவசேவைக்காக  8 புதிய ஆம்புலன்ஸ் வசதி தொடக்கம்.

தேனி மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவசேவைக்காக  8 புதிய ஆம்புலன்ஸ் வசதி தொடக்கம்.


 


உலகம் முழுவதும் கொரனோ நோய் தொற்று காரணமாக லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது .இதன் காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு அத்தியாவசிய தேவைக்கான வாகன போக்குவரத்து மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


 இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்காக அவர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகவோ அல்லது   பிரசவத்திற்காக தனியார் வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.மீறி அவசரமாக தனியார் வாகனங்களை பயன்படுத்துவதால்  போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.இதனை தவிர்க்கும் பொருட்டு தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முயற்சியால் தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உடன் கூடுதலாக 8 புதிய ஆம்புலன்ஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது இந்த எட்டு ஆம்புலன்ஸ் சேவையும் முற்றிலுமாக பிரசவம் மற்றும் கர்ப்பிணி பெண்களின் சேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் தேனி மாவட்டத்தில் உள்ள 8 வாகனங்களும் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் நிறுத்தப்படும். கர்ப்பிணி பெண்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தொடர்பு கொண்டோ அல்லது 108 என்ற எண்ணில் அழைத்தோ கர்ப்பிணிப்பெண்கள் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். நேற்று தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் என்ற பகுதியிலிருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் அழைத்ததன் பேரில் பத்து நிமிடங்களில் இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் சென்று அந்த கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துக்கொண்டு போடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர். மருத்துவமனையில் அந்தப் பெண்ணிற்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
தேனி மாவட்ட செய்திகளுக்காக
க.சின்னதாஸ்


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image