திருப்பூர் பனியன் கம்பெனியில் பணி புரிந்தவர் திடீர் மரணம் கொரோனா பீதியில் கிராம மக்கள்
செங்கம்,ஏப்ரல்.19_ திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் சிவா (வயது.29) என்பவர் திருப்பூர் அவினாசியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்திய நிலையில் சொந்த ஊரான புளியம்பட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வரும் நிலையில் திடீரென உடல் நலம் குறைபாடு ஏற்பட்டதால் உடனடியாக இவரை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த பின்னர் கோரோனா வைரஸ் தொற்று ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சிவா என்பவர் இறந்து போனார். இவரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏதும் இல்லை
என்பது ஆய்வில் தெரிய வந்ததாக தெரிவித்தார். இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தார்கள். செங்கம் அடுத்த புளியம்பட்டி பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் கோரோனா வைரஸ் தொற்று நோயால் இறந்திருக்கலாம் என பீதியால் பரபரப்பு ஏற்பட்டதால் பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் அவர்களின் ஆலோசனையின் பேரில் உதவி மருத்துவர்கள், மருத்துவ ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 150.க்கும் மேற்பட்டவர்கள் கிராமத்தில் உள்ள ஏழு கிலோ மீட்டர் சுற்றளவில் 560.குடியிருப்புகளை வீடுதோறும் நேரில் சென்று பரிசோதனை செய்து நடவடிக்கை மேற் கொண்டார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073