அரசின் அறிவிப்பை ஏற்று சமூக சிந்தனையோடு கெட்டி மேளம் நாதஸ்வரம் இல்லாமல் 6 பேர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிமையான முறையில் நடைபெற்ற திருமணம்
ஊரடங்கு உத்தரவால் திருமண மண்டபங்களில் நடைபெற இருந்த அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு முன்பணம் திருப்பித் தரப்பட்டது இருப்பினும் மணமக்கள் வழக்கம்போல் தாங்கள் கேட்கும் ஜோசியரின் அறிவுறுத்தலின்படி குறித்த நேரத்தில் திருமணங்கள் நடைபெற்று வருகிறது அப்படி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோட்டவயல் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன் மற்றும் பவித்ரா ஆகியோருக்கு அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது இதில் கெட்டிமேளம் நாதஸ்வரம் இல்லாமல் உறவினர்கள் ஆறு பேர் மட்டுமே கலந்து கொண்டு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது அரசின் அறிவிப்பை ஏற்று சமூக சிந்தனையோடு உண்மையாக நடைபெறும் இதுபோன்ற திருமணங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்க முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே இருந்து மணமக்களை வாழ்த்துவோம்