தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி தலைமையில் சிறுகுறு வணிகர்களுக்கும் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை கடை நடத்துவது தொடர்பாக
செங்கம்,ஏப்ரல் 12: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள அனைத்து வணிகர்களுக்கும், சாலையோரம் சிறுகுறு வணிகர்களுக்கும் மற்றும் கை வண்டி மூலம் விற்பனை செய்துவரும் பழக்கடை வணிகர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி தலைமையில் 144 தடை உத்தரவு நிறைவடையும் வரை அனைத்து வணிகர்களும் நாள்தோறும் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வீதிவீதியாக வீடுகள்தோறும் நேரில் சென்று சுழற்சிமுறையில் மளிகை பொருட்கள் காய்கறிகள் மற்றும் பழ வகைகளை விற்பனை செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் இதில் செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் ஆகியோர்கள் பங்கேற்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகளிடம் மத்திய மாநில அரசுகள் அறிவித்த கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையான சமூக இடைவெளியை பின்பற்றி வணிகர்கள் அனைவரும் தாமாகவே முன் வரவேண்டும் என அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து வணிக வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சாலையோரம் விற்பனை செய்யும் பழக்கடை மற்றும் காய் கனி சங்க வணிகர்களின் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் செயல் அலுவலர் அறிவுறுத்திய வழிகாட்டுதலை பின்பற்றும்படி ஒப்புதல் அளித்தார்கள். இந்த திட்டம் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் D.EEE., 9787615073