பெரம்பலூர் அருகே தாய் இறந்த அரை மணி நேரத்தில் தூய்மை பணி மேற்கொள்ள சென்ற தூய்மை பணியாளருக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் April 28, 2020 • M.SENTHIL பெரம்பலூர் அருகே தாய் இறந் அரை மணி நேரத்தில் தூய்மை பணி மேற்கொள்ள சென்ற தூய்மை பணியாளருக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் பெரம்பலூர்: ஏப்: 29 கொரனா நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் Vகளத்தூர் கிராமத்தில் கொரனாவால் மொத்தம் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். V.களத்தூர் கிராமம் முழுவதும் சுகாதார துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு V .களத்தூர் கிராமத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றும் அய்யாத்துரை என்பவரின் தாய் அங்கம்மாள் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்து உள்ளார் இருப்பினும் தாயின் இறுதி சடங்கை முடித்து விட்டு அரை மணி நேரத்தில் மீண்டும் தூய்மை பணிக்கு சென்று உள்ளார் இதனிடையே தமிழக முதல்வர் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தாயாரை இழந்த தூய்மை பணியாளர் அவர்கள் தாயை இழந்த சோகம் மறையும் முன்னரே இறுதி சடங்கு முடிந்ததும் கொரனா பணியில் ஈடுபட்டது நெகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரது அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குவதாகவும் தெரிவித்து டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதனிடையே தாயை இழந்த அரை மணி நேரத்தில் தூய்மை பணி மேற்கொள்ள சென்ற அய்யாதுரையை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் நேரில் சென்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவருக்கு 5000 நிதியுதவி அளித்து கவுரவப்படுத்தினார்.