திட்டக்குடி அடுத்த பெரங்கியம் பகுதியில் ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இராமநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரங்கியம் பகுதியில் ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரமணி தலைமை வகித்தார். இராமநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து , அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளர் விசுவநாதன் , ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கந்தசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிவாரணம் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள குடும்பங்களுக்கு திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேலன், சமூகநலத்துறை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தனி வட்டாட்சியர் அந்தோணிராஜ், மேனாள் மாவட்ட கல்வி அலுவலரும் வெங்கனூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான சுவாமி முத்தழகன்,ஆகியோர் அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.
நிகழ்வில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒன்றிய தலைவர் ஜெயசீலன், செயலாளர் லட்சாதிபதி, துணை தலைவர்கள் அம்பேத்கர்,வேல்மணி, துணை செயலாளர் கந்தசாமி, பிரச்சார செயலாளர் ராஜேந்திரன் , மேனாள் வட்ட துணைத் தலைவர் அர்ச்சுனன், செயற்குழு உறுப்பினர் முருகன், ஊராட்சி செயலாளர் பிரேம்குமார், ஒருங்கிணைப்பாளர் விக்டர் மனோகர் ராஜ், ஆகியோர் கலந்துகொண்டு 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.