கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நகர மற்றும் ஒன்றியங்களில் 5000 வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டத்தில்
கொரானா நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு உடனே வாங்க வேண்டும்
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறு- குறு விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் உதவித் தொகை வழங்கிடவும்
அனைத்து விவசாய கடன் வசூலையும் ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்கவும்
நூறுநாள் வேலைத் திட்டத்தை விவசாய பணிகளுக்குப் பயன்படுத்திட உத்தர விடவும்
ஊரடங்கால் பழங்கள், பூ உட்பட வேளாண் விளை பொருட்கள் அழிந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்
விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்றும்
ஏழை குடும்பங்கள் அனைத்திற்கும் ரேசன் பொருட்களை இலவசமாக வழங்குவதுடன், தலா ரூ.5000 உதவித்தொகை வழங்கு!
மாநிலம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பதுடன், கொரானா நோய் பாதிப்புள்ள மாவட்டங்களில் அனைவருக்கும் நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட வேண்டும் என பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் இன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் நெல்லிக்குப்பம் திருத்துறையூர் பண்ருட்டி நெய்வேலி விருதாச்சலம் திட்டக்குடி திருமுட்டம் காட்டுமன்னார்கோவில் குமராட்சி பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி புவனகிரி கீரப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் 5000 மேற்பட்ட வீடுகளில்கருப்புக்கொடி ஏற்றி கோரிக்கை அட்டை களோடு முழக்கம் இடப்பட்டது
கடலூர் நகரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கோ மாதவன் பால் உற்பத்தியாளர் சங்கம் தலைவர் பழனி நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர்கள் சேட்டு அல்லாபிச்சை வாலிபர் சங்க நகர செயலாளர் தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
நெய்வேலி நகரத்தில் மாநில பொருளாளர் இல்லத்தில் கொடியேற்றப்பட்டது
நெல்லிக்குப்பம் நகரத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க செயலாளர் தென்னரசு தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்க பொதுச்செயலாளர் ராமானுஜம் முன்னிலையில் நடைபெற்றது
விருதாச்சலத்தில் வட்டச் செயலாளர் செல்வகுமார் முதனை கிராமத்தில் வட்டத் தலைவர் கோவிந்தன் விருதகிரி குப்பம் இருப்புகுறிச்சி கிராமத்தில்மாவட்ட துணைத்தலைவர் அன்னம்மாள் கலந்து கொண்டார்கள்
திருமுட்டம் பேரூர் கிராமத்தில் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஆதிமூலம் தலைமையில் நடைபெற்றது கருணாகர நல்லூர் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ் பிரகாஷ் கலந்துகொண்டார்
குமராட்சி ஒன்றியம் பிள்ளையார் தாங்கல் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது
பரங்கிப்பேட்டை ஒன்றியம் நவாப்பேட்டையில் ஒன்றியத் தலைவர் முத்துக்குமரன் தலைமையில்நஞ்சை மகத்து வாழ்க்கையில் ஒன்றிய பொருளாளர் ஜீவா தலைமையில் நடைபெற்றது
அண்ணாகிராமம் ஒன்றியத்தில் திருத்துறையூர் சின்ன பேட்டையில் ஒன்றிய தலைவர் காந்தி ஒன்றிய செயலாளர் முருகன் மு மாவட்ட துணைத் தலைவர் லோகநாதன் கரும்பு சங்கத்தலைவர் ஆதவன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்
குறிஞ்சிப்பாடி சிந்தாமணி குப்பத்தில் மாவட்ட செயலாளர் சரவணன் எல்லப்பன் பேட்டைகிராமத்தில் கரும்பு விவசாய சங்க தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது