திருப்பூரில் அதிமுக சார்பில் 500 க்கும் மேற்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு அரிசி மூட்டை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
திருப்பூரில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் வேலை இழந்து வருமானம் இன்றி வீட்டில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் ராயபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரை ஓரமாக குஇயிருந்து வரும் குடிசை வாசிகளுக்கு 48 வது வார்டு அதிமுக கழக கிளைச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் சுமார் 500 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அவர்களது குடியிருக்கும் பகுதியில் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.