டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து 500 ரூபாய்க்கு குவாட்டர் என விற்பனை செய்தவர் கைது. அவரிடமிருந்து 277 மது பாட்டில்கள் பறிமுதல்.
திருப்பூர் கொடி கம்பம் பகுதியில் உள்ள வீட்டில் மதுபானங்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன் தலையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது நாகேந்திரன் என்பவர் வீட்டினுள்ளே மதுவை மறைத்து வைத்து வீட்டின் பின்புறமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது ஏழை அடுத்து அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடமிருந்த 277 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 120 ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்களை 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள பெருமாநல்லூர் சாலை சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை கொடுத்த ஊழியர்கள் இருவரை தேடி வருகின்றனர். பிடிபட்ட நாகேந்திரனை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.