பெரிய கோளாப்பாடி எச்.எச்.495 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் குறைந்த விலையில் பண்ணை பசுமை காய்கறி நடமாடும் அங்காடி விற்பனை
செங்கம் ஏப்ரல் 12 : திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த செ.அகரம் ஊராட்சியில் பெரிய கோளாப்பாடி எச்.எச்.495 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்திய நிலையில் பொதுமக்கள் கடந்த 15 தினங்களுக்கு மேலாக வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் இருந்து வருவதால் அவர்களின் நலன் கருதி தமிழக அரசும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி குறைந்த விலையில் பண்ணை பசுமை காய்கறி நடமாடும் அங்காடி வாகனம் மூலம் சங்கத் தலைவர் அகரம் ஆர்.ஜே.அய்யனார் தலைமையில் கிராமங்கள் தோறும் வீடு வீடாக நேரில் சென்று சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் விற்பனை செய்துவரும் காய்கறிகளை ஊராட்சிகள் மற்றும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் பெற்றுச் செல்கிறார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் D.EEE., 9787615073