திருப்பூரில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது 227 மதுபான பாட்டில்கள் ஒரு கார் பறிமுதல்
திருப்பூர் ராயபுரம் பகுதியில் சிலர் காரில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்ட போது அங்கு காரில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வந்த ஐந்து பேரை போலீசார் பிடிக்க முற்பட்ட போது, ஒருவர் தப்பிச் செல்லவே போலீசாரிடம் மாட்டிக் கொண்டால் 4 பேரை காவல் நிலையததில் வைத்து விசாரணை நடத்திய போது நான்கு பேரும் ராயபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்,ஜான்,தனபால்,செல்வகிருஷ்ணன் என்பது தெரியவந்தது இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 227 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் மதுபான விற்பனைக்கு பயன்படுத்தி வந்த ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது .தலைமறைவான முரளி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்