திருப்பூர் - திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மற்றும் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக நல சங்கம் சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள் ,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருப்பூர் மாநகரில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர் போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் அவதி உற்று வருகின்றனர் இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோயில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக நல சங்கம் சார்பில் 300 குடும்பங்களுக்கு ரூ1000 ம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் , 100 ரூபாய் ரொக்கமும் , வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கினர் ,