செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கோமதி தலைமையில்கள்ளச் சாராயம் விற்ற இருவர் கைது30 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கோமதி காவலர்கள் உதவியுடன் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள கிளையூர் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் கார்த்திக் (வயது.29) என்பவரும் செங்கம் அடுத்த வளையாம்பட்டு அருகே உள்ள குமாரசாமி பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது.41) ஆகிய இருவரும் இரு கிராமங்களில் தனித்தனியாக கள்ளச்சாராயம் விற்று வந்தார்கள். இவர்களிடம் இருந்த 30 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073