திருப்பூர் மாநகராட்சியில் 3 நாட்கள் முழு ஊரடங்கு என்பதால் சந்தைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக உள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நாளையதினம் முதல் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளில் தற்காலிக சந்தைகள், மளிகைப் கடைகள் எதுவும் செயல்படாது என்ற காரணத்தால் இன்று பொதுமக்கள் திருப்பூரில் உள்ள தற்காலிக சந்தைகளில் அதிகளவு கூட்டமாக கூடி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கிச் சென்றனர்.இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.