தேவகோட்டையில் சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.
தேவகோட்டை , ஏப்.19- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சாலைகளில் பிரமாண்டமான ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறை, மருத்துவத்துறை , வருவாய்த்துறை , ஊடகத்துறை, தேவகோட்டை நகராட்சி, தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், தியாகிகள் பூங்கா, சிலம்பனி ஊரணி , வெள்ளையன் ஊரணி, ராம்நகர், சருகனி சாலை ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரமாண்டமான வைரஸ் ஒவியம் வரைந்துள்ளனர் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் சுற்றி திரிவோரையும். வீட்டை விட்டு வெளியே வருவோரையும் எச்சரிக்கும் விதமாக தெருவில் சுத்தாதே கொரோனாவை வீட்டிற்கு கொண்டு வராதே 144 தடை உத்தரவை மதிக்கவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முகக் கவசம் அணியவும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவும் போன்ற வாசகங்கள் எழுதியிருந்தனர்