போளூர் அருகே கல்குவாரி தொழிலாளர்களுக்கு ஜவ்வாதுமலை (ஸ்பீடு தன்னார்வ தொண்டு நிறுவனம்) சார்பில் கொரோனா நிவாரணமாக 25 குடும்பங்களுக்கு இலவச அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கினார்கள்

போளூர் அருகே கல்குவாரி தொழிலாளர்களுக்கு ஜவ்வாதுமலை (ஸ்பீடு தன்னார்வ தொண்டு நிறுவனம்) சார்பில் கொரோனா நிவாரணமாக 25 குடும்பங்களுக்கு இலவச அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கினார்கள்.


போளூர்,.ஏப்ரல் - 24
திருவண்ணாமலை மாவட்டம்போளூர் அடுத்த புதுப்பாளையம் மற்றும் வசூர் ஆகிய கிராமங்களில் உள்ள கல்குவாரி தொழிலாளர்களின் நலன் கருதி ஜவ்வாதுமலை (ஸ்பீடு தன்னார்வ தொண்டு நிறுவனம்) சார்பில் கொரோனா நிவாரணமாக 25 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி உட்பட காய்கறிகள், மளிகை தொகுப்புகளை தொண்டு நிறுவனம் நிர்வாகிகள் அசோக், கலைவாணன் ஆகியோர்கள் கொரோனா நிவாரணங்களை வீடுகள் தோறும் நேரில் சென்று மத்திய மாநில அரசுகள் அறிவித்த சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கினார்கள்.


மேலும் இதனை தொடர்ந்து காவல் துறையினர் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு முககவசம் வழங்கி அவர்களுக்கு கொடிய நோயான கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இவர்களுடன் ஊராட்சி மன்றதலைவர் அன்புக்கரசி, கண்ணமங்கலம் செயின்ட் தாமஸ் நர்சிங் கல்லூரி தாளாளர் வேல்முருகன், சமுக ஆர்வலர்கள் ஆரணி மோசஸ், செல்வன், குமார், கிளையூர் டாக்டர் அப்துல்கலாம், நற்பணி மன்ற நிர்வாகிகள் கோபி, விஜய், சங்கரன் என பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் செங்கம் செய்தியாளர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image