திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது. அவர்களிடமிருந்து 208 மது பாட்டில்கள் பறிமுதல்.
திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி டாஸ்மாக் கடையின் பின்புறம் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த அய்யப்பன், முத்துராமு என்ற இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 208 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கார்த்திக், ரஜினி, பாஸ்கர் என்ற மூவரையும் தேடி வருகின்றனர்.