*திண்டிவனம் அம்மா உணவகத்தில் மக்களுக்கு இலவச உணவளிக்க சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிதி உதவி அளித்தார்.*
திண்டிவனம் ஏப்-23
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏழை எளிய மக்கள் அனைவரும் எளிதில் உணவருந்தும் வகையில் தமிழகம் எங்கும் அம்மா உணவகங்களை திறந்து வைத்தார். தற்போது கோரானா நோயால் தமிழகத்தில் ஊரடங்கு 28 நாட்களாக தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் பலர் அம்மா உணவகங்களையே நம்பி உள்ளனர். இந்நிலையில் திண்டிவனம் ஏழை மக்களுக்கு மேலும் உதவும் வகையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மே 3 வரை மூன்று வேலை உணவு இலவசமாக வழங்க 1லட்சம் ரூபாய் சொந்த செலவில் நிதி உதவி அளித்தார். அதனை நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் தீனதயாளன்,அம்மா பேரவை இணை செயலாளர் சேகர்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஷெரீப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்