கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் வகுப்பு
மாணவி, கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிதி
உதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு வெ.அன்புச்செல்வன்
இ.ஆ.ப அவர்களிடம் வழங்கினார்
கடலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பாப்புலியூர்
லட்சுமி சோர்டியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு
பள்ளி மாணவி செல்வி மிருதுளா கொரானா வைரஸ் நோய் தடுப்பு
நடவடிக்கைகள் ரூபாய் 44 ஆயிரத்து 26 யினை மாவட்ட ஆட்சித்
தலைவர் திரு வெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப அவர்களிடம் இன்று
(13 .04. 2020) வழங்கினார்
கடலூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் நோய் தடுப்பு
நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர்
சிங்காரத்தோப்பு சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகள் செல்வி
மிருதுளா மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய்
44 ஆயிரத்து 26 யிணை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வெ.
அன்புச்செல்வன் இ.ஆ.ப அவர்களிடம் வழங்கினார்