*திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில்1500 குடும்பங்களுக்கு ஸ்ரீ ஷீரடி சத்திய சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகி பூனா குமார் நிவாரணம் வழங்கினர்*
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மைலம் பகுதியில் கோரானா ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு மயிலம் ஒன்றியம் கொல்லியன்குணம், மரக்காணம் ஒன்றியத்தைச் சேர்ந்த வேங்கை,கீழ்பேரடிகுப்பம், கீழ்சித்தாமூர், மொளசூர், ஆகியபகுதியில் வறுமையில் வாடும் 1500 ஏழை எளிய குடும்பங்களுக்கு மயிலம் சாய்பாபா நகரில் உள்ள ஸ்ரீ சீரடி சத்திய சாய்பாபா சேவா அறக்கட்டளை நிர்வாகி பூனா குமார் தலைமையில் தலா 5 கிலோ அரிசி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது .
மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் கோரானா நிவாரணப் பணி ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு 5000பாதுகாப்பு முக கவசம் 2000 கையுறை ஆகியவற்றை வழங்கினார்.
ச. சரண்ராஜ்
விழுப்புரம் மாவட்டம்