நேரு யுவகேந்திரா மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றமும் இணைந்து 15 வகையான காய்கறிகள் மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கினர்
செங்கம் ஏப்ரல் 12:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவை தொடர்ந்து அமல்படுத்தி இருந்து வரும் நிலையில் நாள்தோறும் கூலி வேலைக்கு செல்லும் ஏழை எளியோர், நலிந்தோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களை தேர்வு செய்து வீடு வீடாக நேரில் சென்று சமூக இடைவெளியை பின்பற்றி மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றமும் இணைந்து 15 வகையான காய்கறிகள் மற்றும் மளிகை தொகுப்புகளை இலவசமாக நேரு யுவகேந்திரா ஒன்றிய சேவை தொண்டன் தங்கராஜ் மற்றும் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் பங்கேற்று வழங்கினார்கள்.
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073