திருப்பூரில் 144 தடை உத்தரவையும் மீறி சாலையில் திரண்ட ஏறாளமான வாகன ஓட்டிகள் -- போலீசார் அறிவுரை வழங்கி எச்சரித்து வழியனுப்பி வைத்தனர்
கொரோனா நோயால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கும் வண்ணம் மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே தடையுத்தரவை தொழில் நகரமான திருப்பூரில் இன்று ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உலாவ தொடங்கினர். இதையடுத்து திருப்பூர் குமரன் சாலையில், சாலையில் குவிந்த வாகன ஓட்டிகளை நிறுத்திய திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன், மற்றும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா தலைமையிலான போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியதோடு, முக கவசம் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் வழங்கியும் எச்சரித்தும் அனுப்பிவைத்தனர்