தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 1000 ஊக்கத்தொகை வழங்கிய தொழிலதிபர்
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் அயராது பணியாற்றி வரும் திட்டக்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் 87 பேருக்கு துபாயில் தொழில் செய்துவரும் கண்ணன்ரவி அரிசி மளிகை பொருட்கள் முக கவசம் மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் மேலும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தூய்மைப் பணியாளர் மற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் ரொக்கபணம் வழங்கினார் இதனை அவர் சார்பில் அவருடைய தாயார் வாலாம்பாள் அனைவருக்கும் வழங்கினார் அப்பொழுது காவல்துறை அதிகாரிகள்மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்