100 குடும்பங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக நகர மாணவரணி துணை செயலாளர் குட்டி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்வார் ஊரணி மாதா நிலை இறக்கம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் அனைவரும் கூலித் தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தனர் இந்நிலையில் காரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் வேலைக்கு செல்லாததால் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர் இதை அறிந்த திமுக நகர மாணவரணி துணை செயலாளர் முத்துராஜா என்ற குட்டி100 கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 36 ஆயிரம் மதிப்புள்ள அரிசி,மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கினார்