தூத்துக்குடியில் தனது சொந்த வீட்டிலே 100 பவுன் நகை திருட்டு நாடகமாடிய மனைவியின் செயலால் வேதனையில் கணவர் தற்கொலை

தூத்துக்குடியில் தனது சொந்த வீட்டிலே 100 பவுன் நகை திருட்டு நாடகமாடிய மனைவியின் செயலால் வேதனையில் கணவர் தற்கொலை


தூத்துக்குடியில் 100 பவுன் நகை திருட்டு போனதாக மனைவி நாடகமாடியதால் வேதனையில் துறைமுக சபை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரை சேர்ந்தவர் சவேரியார் பிச்சை மகன் வின்சென்ட் (59). வ.உ.சி. துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜான்சி ராணி. இவர்களது 2 மகள்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை யாரோ மர்ம நபர் கொள்ளையடித்து சென்றதாக ஜான்சி ராணிபுகார் அளித்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தினர். 


காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஜான்சி ராணி (57), கணவரின் கஞ்சத்தனத்தின் காரணமாக நகையை திருடியதோடு குடும்பத்தாரை ஏமாற்றும் விதமாக கொள்ளை சம்பவ நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் மனைவி தன்னை ஏமாற்றி விட்டதாக வின்சென்ட் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image