கல்லல் பிச்சம்மை அறக்கட்டளை சார்பில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கிருமிநாசினி இயந்திரத்தை மாவட்ட நிர்வாகத்தின் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு ஒப்படைக்கப்பட்ட இயந்திரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தொடங்கி வைத்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு அஞ்சி மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி வருகின்றனர் இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் பெரிய அளவிலான இயந்திரங்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் கிருமி நாசினியை தெளித்து வருகிறது. மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் மட்டுமே இது போன்ற கிருமிநாசினி இயந்திரங்கள் செயல்பாட்டில் நிலையில் சிவகங்கை மாவட்டம் கல்லை சேர்ந்த பிச்சம்மை அறக்கட்டளை சார்பில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கிருமிநாசினி இயந்திரத்தை வாங்கி கொடுத்து ஊராட்சிகளில் சுகாதார பணிகளை மேம்படுத்த உதவியுள்ளனர். இந்த இயந்திரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு பிச்சம்மை அறக்கட்டளை தலைவர் சரவணன் அர்ப்பணித்துள்ளனர் இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக இன்று மானகிரி தளக்காவூர் பஞ்சாயத்தில் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை சிவகங்கை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்