திருவாரூர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ள ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை உணவுத்துறை அமைச்சர் .இரா.காமராஜ் பார்வையிட்டார்.
திருவாரூர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ள ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை உணவுத்துறை அமைச்சர் .இரா.காமராஜ். பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் .த.ஆனந்த்., உடனிருந்தார்.
பின்னர் உணவுத்துறை அமைச்சர் .இரா.காமராஜ் தெரிவித்ததாவது…
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழை, எளிய சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டுவிடகூடாது என்பதற்காக அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தங்குதடையின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்து வருகிறது.
இம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களால்; வழங்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களாக ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டர் சர்க்யூட், இரத்த அழுத்த கருவி, பணியாளர் பாதுகாக்கும் கருவி, முககவசம், படுக்கை விரிப்புகள், வெப்ப ஸ்கேனர், மொபைல் எக்ஸ்ரே, பல்ஸ் ஆக்ஸி மீட்டர், மல்டி பேரா மானிட்டர், கேலா ஒளி கருவி உள்ளிட்டவைகள் வாங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என உணவுத்துறை அமைச்சர் .இரா.காமராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர்.ஏ.கே.கமல் கிஷோர்., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள்,, சுகாதாரத்துறை இணை இயக்குநர்; மரு.ராஜமூர்த்தி, துணை இயக்குநர் மரு.விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் செல்வி.ஜெயபிரீத்தா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.