திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே போளூர் சாலையில் உள்ள பம்பாய், எஸ்.என்.எம் ஆகிய ஜவுளி கடைகள் தொடர்ந்து 144 தடை உத்தரவை மீறி திறந்து வைத்து நாள்தோறும் விற்பனை செய்து வந்தார்கள். இதனை செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் அவர்களின் ஆலோசனைப்படி காவல் ஆய்வாளர் சாலமோன்ராஜா கடைகளை மூடி ஜவுளிக்கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இதனை தொடர்ந்து தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி விதிமுறையை மீறி செயல்பட்ட ஜவுளி கடைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி அதிரடியாக சீல் வைத்தார். இவருடன் எழுத்தர் ரமேஷ், ரவி மற்றும் அலுவலக உதவியாளர்கள் பங்கேற்றனர்
மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் டி.இஇஇ., 9787615073