திருப்பூரில் களப்பணியில் உள்ள காவலர்களுக்கு கொரோனா வைரஸ் அதிவிரைவு சோதனை நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு களப்பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என கண்டறிய அதிவிரைவு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி திருப்பூர் 15.வேலம்பாளையம் காவல் நிலையத்தில் திருப்பூர் வடக்கு காவல் உதவி ஆணையர் வெற்றி வேந்தன் தலைமையில் காவலர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது 15.வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் முருகைய்யா, வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன், அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜன் மற்றும் வடக்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அனுராதா உள்ளிட்டோர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.