பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கவிதை கணேசன் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது ...
மக்களுக்கு உதவும் வகையில் இலக்கியம்,விவசாயம்,வரலாறு ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளாகச் சேவை செய்துவரும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கவிதை கணேசனுக்கு "குளோபல் ஹியூமானிடி பீஸ் யுனிவர்சிட்டி" என்ற அமெரிக்கப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் என்ற பட்டத்தை 14-3-20 ல் வழங்கியது.
பல வரலாற்று நூல்களையும்,தானிய அறிவியல் நூல் ஒன்றும்,மொழிபெயர்ப்பு நூலும் படைத்து சாதனைகள் புரிந்து வருகிறார்.உலக இயற்கைத் திருவிழாவில் பங்கேற்றவர்.உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் ஆய்வாளராக கலந்துகொண்டவர்.600 வகை பாரம்பரிய நெல் & விதைகளை இந்தியா முழுவதும் கண்காட்சி நடத்தி வருபவர்.ஜனாதிபதி,கவர்னர்கள், முதலமைச்சர்களிடம் நன்சான்றுகள் பெறறுள்ளார்.திருவதிகைநாடு தொல்லியல் கழகத்தை நிறுவி இந்தியா முழுவதிலும் பழம்பொருட்கள் நாணயங்கள் அஞ்சல் தலைகள் கண்காட்சிகளை,பாரம்பரிய விதைகளை பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களில்,விவசாயக் கூட்டங்களில் நடத்தி இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.150 அரியவகை மூலிகைகளை வளர்த்து மக்களுக்கு பயன்பட வகை செய்துள்ளார்.நூறு ஆண்டுகள் உணவு தானியங்கள் கெடாமல் சேமிக்க உணவுதானிய ஆராய்ச்சி மையம் ஹைதராபாத் மூலம் மத்திய அரசுக்கு ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.கவிதை டிவி என்னும் யூடியூப் சேனலை ஆரம்பித்து கவிதை கணேசன் kavithai ganesan என்ற இணைய இணைப்பில் 2000 குறும் படங்களை வெளியிட்டு தினமணி,என்.எல்.சி புத்தகத் திருவிழாவில் குறும்பட இயக்குநர் சான்று பெற்றுள்ளார்.பல துறைகளிலும் மக்களுக்குச் சேவை செய்து வரும் பன்முகத்தன்மை கொண்ட கவிதை கணேசனுக்கு டாக்ட்டர் பட்டம் வழங்கினார்.இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் மேலாளர் தரக்கட்டுப்பாடு என்ற மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.பென்ஷன் இல்லாத துறை என்றாலும் தன் சொந்த செலவில் உலகச் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.மத்திய உணவு தானிய ஆர்ய்ச்சி மையத்திலும்,அண்ணா மேலாண்மைக் கழகத்திலும்,தஞ்சை மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திலும்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலும் கௌரவ விரிவையாளராகச் பணி செய்துள்ளார்.