பெட்ரோல்,டிசல்,மீதான கலால் வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !*

*பெட்ரோல்,டிசல்,மீதான கலால் வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
 
ஜனநாயக மக்கள் மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . 


மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ 22.98 ஆகவும் டீசலுக்கு ரூ 18.83 ஆகவும் உயர்த்துள்ளது இந்த உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 2014 மோடி அரசு பதவி யேற்ற போது பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ 9.48 இருந்தது டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ 3.56 என்ற அளவில் இருந்தது பா ஜ க ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய கலால் வரி 12 முறைக்கு மேல் உயர்த்தபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 


பா ஜ க அரசு கலால் வரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு பெரும் அளவில் வரி விதிப்பதனால் நடுத்தர மக்கள்  மற்றும் தொழிலாளர்கள் பாதிக்க படுவார்கள் என்பதை மத்திய பா ஜ க அரசு கருத்தில் கொண்டு கலால் வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.


கடந்த 6 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை 50 சதவிததிற்கு மேலாக குறைந்த போதிலும் இந்த அளவிற்கு பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உயர்வுனால் மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


எனவே : பெட்ரோல், மற்றும் டீசல், ஆகியவற்றை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டுவர வேண்டும் மெனவும் .கலால் வரியை  திரும்ப பெற வேண்டும். ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image