செங்கம் அடுத்த கிளையூர் கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

செங்கம் அடுத்த கிளையூர் கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


செங்கம், மார்ச்: 23 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் கல்லாத்தூர் ஊராட்சி கிளையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு தாழைமடுவு காளியம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ் நாட்டில் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளீட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் இருபதாயிரம் பேர் கலந்துக்கொள்கின்றனர். தினமும் கோயில் திறந்து வைத்து பூஜை செய்து வருகின்றனர். இதன் மூலம் மாதம் முழுக்க சுமார் பத்தாயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள செய்யாறின் ஓரம் தீர்த்தம் மற்றும் அருகில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு பிரமாண்டமாக கட்டப்பட்ட கோயில் உள்ளது. இங்கு வேன்டினால் திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும், அனைத்து வகை வேண்டுதலும் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பிரச்சனைகளால் யாரும் பாதிப்புக்கு உள்ளாகி விடக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக கோயில்களில் கூட்டம் சேருவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கிளையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு தாழைமடுவு காளியம்மன் திருக்கோயிலில் அன்றாடம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருகின்ற 24.03.2020 அமாவாசை அன்று அதிகஅளவில் கூட்டம் சேருவதற்கு வாய்புள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கூட்டம் சேருவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் விரும்புகிறார்கள். 


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image