திருவாரூர் வட்டம் எட்டியலூர் கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் வட்டம் வடகண்டம் ஊராட்சி எட்டியலூர் கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர்.த.ஆனந்த் ஆய்வு செய்தார். நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளின் எடை மற்றும் தரத்தினை ஆய்வு செய்து, இருப்பு வைக்கப்பட்டுள்ள சாக்குகளின் விபரம், தினசரி கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளின் விபரங்களை கொள்முதல் நிலைய அலுவலரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது….
திருவாரூர் மாவட்டத்தில் 463 நேரடி நெல் கொள்முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் ஒரு நாளைக்கு இன்றைய நிலவரப்படி 13 ஆயிரத்து 506 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 893 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 89 ஆயிரத்து 937 விவசாயிகளுக்கு 689 கோடியே 93 லட்சத்து 58 ஆயிரத்து 484 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நேரடி நெல்கொள்முதல் தொடர்பாக பெறப்படும் புகாருக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு விவசாயிகளின் நெல் காலதாமதமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இவ்ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.ஜெயபிரீத்தா, வட்டாட்சியர் .நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.