வேலம்மாள் பள்ளி ஆசிரியைக்கு
நல்லாசிரியர் விருது
காரம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியை
திருமதி தேன்மொழி அவர்களுக்கு, கோல்டன் கிரவுன் நிறுவனம் வழங்கிய நல்லாசிரியர் விருதினை, சென்னை விஜிலென்ஸ் அதிகாரி திருமதி இந்திராணி அவர்கள் வழங்கினார்.
கல்வித்துறையில் திருமதி தேன்மொழி அவர்களின் அர்ப்பணிப்புக்கும் சிறந்த சேவைமனப்பான்மைக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. இவரது முன்மாதிரியான சேவையை வேலம்மாள் கல்விக் குழுமம் பாராட்டி வாழ்த்துகிறது.
இந்த நிகழ்வை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் தொகுத்து வழங்கியது. இந்நிறுவனத்தின் மாநிலத் தூதர் திரு.ராஜ்குமார் அவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
வேலம்மாள் பள்ளி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது