தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்.
தேவகோட்டை மார்ச், 18. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர், தேரடி கருப்பர் கோவில் மாசி மக திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கோவில் நான்கு ரத வீதிகளில் நடைபெற்றது இப்பந்தயத்தில் மொத்தம் 22 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகளும் சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 1 1 வண்டிகளும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது மாட்டு வண்டி பந்தயத்தை கான சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இற்கான ஏற்பாட்டினை கண்டதேவி பொதுமக்கள் செய்திருந்தனர்.