லால்பேட்டையில்
அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியை ஆசிரியர் திட்டி அடித்ததால் பெற்றோர்கள் முற்றுகை. பரபரப்பு காணப்பட்டது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள லால்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் 563 ஆண்கள் பெண்கள் உள்பட பயின்று வருகிறார்கள் இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல் பிரிவில் படித்து வரும் மாணவி ஒருவரை இயற்பியல் ஆசிரியர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திட்டி அடித்ததாக கூறப்படுகிறது இது சம்பந்தமாக அந்த வகுப்பில் பயின்ற 48 மாணவர்கள் ஆசிரியரிடம் கேட்டதாக தெரிகிறது இந்தநிலையில் 12ஆம் வகுப்புக்கான அறிவியல் ஆய்வு தேர்வு நடைபெற்று வந்தது அந்த தேர்வில் குறிப்பிட்ட அந்த மாணவி உள்பட 48 பேருக்கு மார்க் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது இதனை அறிந்த அந்த மாணவர்கள் அந்த பெற்றோர்களுடன் இன்று காலை பள்ளியில் திரண்டதால் பரபரப்பு காணப்பட்டது மேலும் பள்ளியின் உள்ளே சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இது சம்பந்தமாக கேள்விகள் எழுப்பினார்கள் தகவலறிந்த காட்டுமன்னார்கோயில்
காவல் ஆய்வாளர் ராஜா மற்ற உதவி ஆய்வாளர்கள் இளவரசி விரைந்து சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் இடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் பேச்சுவார்த்தையின் போது விசாரணை செய்து நடவடிக்கை படும் என கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது