திருவாரூர் மாவட்டம்
NPR க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட 36 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது
திருவாரூரில் சிறை நிரப்பும் போராட்டம் திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் முகமது பாசீத் தலைமையில் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் கோவை T.A அப்பாஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்..
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஐந்தாஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு CAA,NRC,NPR சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
மத்திய அரசு NPR கணக்கெடுப்பை ஏப்ரல் மாதம் தூங்குவதாக அறிவித்திருக்கிறது NPR
கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்டாள் NRC வேலை எளிதாகிவிடும் என்றும்,
NPR கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மாநில மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அகதி பட்டியலில் இணைக்கப் படுவார்கள். என்பதால் இதை ஆதரித்தவர்கள் கூட இதற்கெதிராக குரல் கொடுத்தும், சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் வருகின்றனர் என்றும்,
CAA,NRC க்கு ஆதரவாக வாக்களித்து
மோடி அமிர்தாவின் ஆசையை அதிமுக நிறைவேற்றி இருக்கிறது.அதிமுகவின் இத்தகைய செயல்களால் தான் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான்,பஞ்சாப்,டில்லி,மேற்குவங்கம்,மத்திய பிரதேசம்,தெலுங்கானா,கேரளா,
ஆந்திர, பாண்டிச்சேரி,பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாநில மக்களின் உரிமையை காப்பதற்காக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழக மக்களின் உரிமையை காக்க CAA,NPR,NRC க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும்,
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் எழுதப்படிக்க தெரியாத இலட்சக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர் .
இவர்களால் மத்திய அரசு கேட்கும் ஆவணங்களை காட்ட முடியாது.
இவகள் பிறப்புச் சான்றிதழ்
காட்ட வில்லை எனில் அகதி பட்டியலில் இடம் பெறுவார்கள்.
80 நாட்களை கடந்து தமிழகத்தில் இப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு
சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும்,
மாநில செயலாளர் கோவை T.A. அப்பாஸ் அவர்கள் பேசினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் காதர், மாவட்ட பொருளாளர் முகமது சலீம், தெற்கு மாவட்ட செயலாளர் அரபாத், தெற்கு மாவட்ட ஹாஜாமெய்தீன், வடக்கு மாவட்ட துணை தலைவர் பீர் முஹம்மது, மாவட்ட துணைச் செயலாளர்கள் இஸ்மத், மாலிக் மாணவர் அணிச் செயலாளர் ஆசாத் மருத்துவரணி செயலாளர் ஹாஜா மற்றும் தொண்டர் அணி செயலாளர் அனஸ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக திருவாரூர் தெற்கு மாவட்ட தலைவர் மிஸ்கின் அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.