*நிருபர்களுக்கு மருத்துவ சிகிச்சை காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு வழங்கிய திரு பிரபு எம்எல்ஏ அவர்களுக்கு*
*நன்றி! நன்றி!! நன்றி!!!*
*கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரில் உள்ள நிருபர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிருபர்கள் மொத்தம் 30 நபர்களுக்கு ஸ்டார் ஹெல்த் சிகிச்சை காப்பீடு ரூபாய் 2 லட்சம் வரை சிகிச்சை பெறுவதற்கான காப்பீடும், யுனைடெட் இந்தியா பாலிசி நிறுவனத்தில் தனிநபர் விபத்து காப்பீடு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு தொகை பெரும் விதமான காப்பீடு ஆகியவை நிருபர்களுக்கு வழங்கிட கோரி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு அவர்களிடம் நிருபர்கள் கோரிக்கை வைத்தனர் அதனை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ இரண்டு பாலிசி நிறுவனங்களின் படிவங்களை நிருபர்கள் இன்று பூர்த்தி செய்து அப்படிவம் ஆவணங்களுடன் கள்ளக்குறிச்சி சட்டமன்ற அலுவலகத்தில் எம்எல்ஏ திரு பிரபு அவர்களிடம் வழங்கினார்கள் அதனை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ திரு பிரபு அவர்கள் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு 30 படிவங்களுடன் ₹.1,39,413 மற்றும் யுனைடெட் இந்தியா நிறுவனத்திற்கு ₹.15960 மொத்தம் தொகை₹.1,55,373 இந்த தொகைக்கான காசோலையை இரண்டு நிறுவனத்திடம் வழங்கினார் நிருபர்களுக்கு சிகிச்சை மற்றும் விபத்து காப்பீடு பெறுவதற்கு உதவி செய்த சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு அவர்களுக்கு அனைத்து நிருபர்கள் சார்பிலும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்*