செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்ட  காய்கனி கமிஷன் மண்டி வளாகத்தை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா ஆய்வு

பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்ட  காய்கனி கமிஷன் மண்டி வளாகத்தை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா ஆய்வு


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் காய்கனி கமிஷன் மண்டி வளாகத்தில் நாள் தோறும் செங்கம் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் அறுவடை செய்த காய்கனிகள் மற்றும் பழ வகைகளை கொண்டு வந்து மொத்தமாக ஏல முறையில் விற்பனை செய்து விட்டு செல்கிறார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்கிறார்கள் என்பதனை செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி அவர்களிடம் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் பொதுமக்களின் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்ட தனியார் காய்கனி கமிஷன் மண்டி வளாகத்தை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா ஆய்வு செய்த போது எடுத்த படம். இந்த ஆய்வில் வட்டாட்சியர் பார்த்தசாரதி, காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி என பலர் பங்கேற்றனர். இனிவரும் நாட்களில் 144 தடை மறு உத்தரவு வரும் வரை தனியார் கமிஷன் மண்டி வளாகத்தில் உள்ள மண்டி உரிமையாளர்களுக்கு சுழற்சி முறையில் கமிஷன் மண்டிகளை செயல்படுத்த அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து வளாகத்தில் இருந்த விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் காய்கனி கமிஷன் மண்டி உரிமையாளர்கள் அரசு அலுவலர்கள் ஏற்படுத்திய அறிவுறுத்தலுக்கு அனைவரும் இனிவரும் நாட்களில் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தார்.


 


மக்கள் கருத்து நாளிதழ் திருவண்ணாமலை மாவட்ட நிருபர் சி.அரிகிருஷ்ணன் 9787615073


Popular posts
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் - புதிய இந்தியாவுக்கு மாபெரும் முன்னேற்றம்பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர்
சிந்து நதி அழைக்கிறது: இறையாண்மையை மீட்டு, பெருமையை தக்கவைத்தல்- அர்ஜுன் ராம் மேக்வால்,மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்
Image
வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு
Image
நெசவுத் தொழிலின் பாரம்பரியம் எதிர்காலத்திற்கான அதிகாரம்- பபித்ரா மார்கரீட்டாஜவுளித் துறை இணையமைச்சர்
Image
குரு பூர்ணிமா: மனிதகுலத்தை பிரகாசிக்கச் செய்யும் ஒரு ஒளி.- திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர், இந்திய அரசு
Image