உலக மகளிர் தினம் விழா கொண்டாடப்பட்டது.
ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக உலக மகளிர் தின விழாவினை சிறப்பாக கொண்டாடிடும் பொருட்டு கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் , நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் , திட்டம் சார்ந்த செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு கடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக மகளிர்கள் அனைவரும் பெண்கள் நலன் காப்போம் , பெண்மையை போற்றுவோம் என்று மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா தலைமையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மகளிர் தினவிழாவில் அனைத்து பெண்களும் இனம் மொழி ஜாதி மதம் தவிர்த்து அனைத்து பெண்களும் ஒற்றுமையோடு வாழ்வோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் அனைவரும் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து நியூ சினிமா திரையரங்கம் வழியாக ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பேரணியை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் காஞ்னா அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் நகராட்சி நகரங்களை அலுவலர் அரவிந்த் ஜோதி , உதவி திட்ட அலுவலர் கலைவண்ணன் , மாவட்ட மகளிர் திட்ட உதவி இயக்குனர் விஜயகுமார் , உதவி திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன் கௌதமன் மற்றும் சமுதாய அமைப்பாளர்கள் பவுனம்மாள் சரண்யா சுமதி பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.