விழுப்புரம் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முக கவசம் விநியோகம்
திண்டிவனம்
திண்டிவனத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக பொதுமக்களுக்கு நகரில் உள்ள நேரு வீதி மேம்பாலம் அருகில் காந்தி சிலை மற்றும் செஞ்சி பேருந்து நிறுத்தம் ஆகிய மக்கள் அதிகம் நாடமாடும் இடங்களில் இலவசமாக முக கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்து. இந்திராகாந்தி பேருந்து நிலையத்தில் உள்ள வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழுப்புரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இளைஞரணி சார்பாக கொரானா வைரஸ் குறித்த பிரசுரங்கள் மற்றும் முக கவசத்தினை விழுப்புரம் மாவட்ட செயலாளர் திரு ஆர் எத்திராஜ் வழங்கினார் உடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன்குமார் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.