பண்ருட்டியில்கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேதனை
கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஇந்த நிலையில் பண்ருட்டியில்கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பார்வையிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் இந்த கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறும் சூழ்நிலையில் தற்போது இருந்து வருகிறது இந்த நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதுசமூகத்துக்குச் செய்யும்துரோகமாக இருக்கிறது உங்கள் குழந்தைகளுக்கு செய்யும் துரோகம் மாகவும் உள்ளது காவல்துறை 24 மணி நேரமும் உணவின்றி தூக்கமின்றி பணியாற்றி வருகின்றனர் அரசு அலுவலர்களும் அதே போல பணியாற்றி வருகின்றனர் துப்பரவு பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகின்றனர் அவர்களுக்கும் குழந்தை பிள்ளைகள் வீடு குடும்பம் இருக்கிறது பொதுமக்கள் முழுவதுமாக வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வீடு தேடி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 24 மணிநேரமும் அரசு அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர் 1077 என்ற என்னை அழைத்து உங்களுக்கு என்ன பொருள் வேண்டும் என்று கூறி உங்கள் முகவரியை தெரிவித்தால் தேவையான பொருள்கள் உங்கள் வீடு தேடி வரும் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேதனையுடனும் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்