ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு கடலூர் நகராட்சி ஒன்றிய குழுவின் முதல் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய குழுத்தலைவர் தெய்வ பக்கிரி தலைமை வகித்தார் துணை தலைவர் அய்யனார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம் கிருஷ்ணமூர்த்தி கே குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டம் தொடங்கியதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தலைவர்கள் சார்பில் தமிழகம் முதல்வர் துணை முதல்வர் தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது இதற்கு திமுக உறுப்பினர் கார்த்திகேயன் எதிர்ப்பு தெரிவித்தார் இதனால் அதிமுக உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் எனவே இதனை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக திமுக உறுப்பினர் கூறினார் ஆனாலும் 10 திமுக உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவர் மட்டும் தனியாக வெளிநடப்பு செய்தார் அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்களது பகுதி பிரச்சினைகளை தெரிவித்தனர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி உறுப்பினர்கள் ஞானப்பிரகாசம் தமிழழகி குருநாதன் சுபாஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
கடலூரில் ஒன்றிய குழுவின் முதல் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது