கொடுத்த கடனை திருப்பி கேட்ட கணவன் மனைவிக்கு அடி உதை ஊராட்சி மன்ற தலைவர் திவ்ய கோபி தலைமறைவு
செங்கம், மார்ச்.12.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவா மனைவி மணிமேகலை (வயது.35) என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த திமுக கட்சியை சேர்ந்த கோபி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ரூபாய் 3.5 இலட்சம் குடும்ப செலவுக்காக கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில் பலமுறை வாங்கிய கடனை திரும்ப தரக்கோரி சிவா கோபியிடம் முறையிட்டு வந்தார் இறுதியாக கடந்த 9.ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவா தன் மனைவி மணிமேகலையுடன் கடனை திரும்ப வழங்கக் கோரி முறையிட்டுள்ளார் அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இந்த வாக்குவாதத்தில் கோபி தன் மனைவி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவி திவ்யா ஆகிய இருவரும் மணிமேகலை என்பவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண் என்று பாராமல் ஆடைகளை கிழித்து அலங்கோல படுத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவானார்கள். இதில் சிவா மனைவி மணிமேகலை என்பவர்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அருகிலிருந்தவர்கள் மீட்டெடுத்து செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கிருந்து சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மணிமேகலை செங்கம் அரசு மருத்துவமனையில் காவல்துறையினருக்கு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோபி மற்றும் மனைவி திவ்யா ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கோபிதிவ்யா ஆகியோர்களை தேடி வருகிறார்கள்.